வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட அனுமதியில்லை – மத்திய அரசு அதிரடி!!

0
foreign dollars
foreign dollars

வெளிநாட்டு நிதியுதவிகளை பெற புதிய கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு

வெளிநாட்டு நிதியுதவிகளை அரசியல் கட்சியினர், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோர் நிதியுதவியை பெறுவதற்கு ஏற்கனவே தடை விதித்த மத்திய அரசு, தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவியை வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

currency
currency

வெளிநாடு நிதியுதவி பெறுவதற்கான சட்டங்களில் மேலும் பல கட்டுப்பாட்டை இந்த சட்டங்களில் சேர்த்து இத்தகைய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடு

நிதியுதவியை பெரும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட அனுமதி கிடையாது. வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியை வழங்குபவர் வழங்குவதற்கான காரணத்தின் கடிதத்தை அனுப்ப வேண்டும். கட்சி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர் அமைப்பு மற்றும் விவசாயச் சங்கம் வெளிநாட்டு நிதியுதவியை வாங்க அனுமதியில்லை.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

money bag
money bag

வெளிநாட்டு நிதியுதவியை பெற விரும்பும் அமைப்புகள் 3 ஆண்டு செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும் மற்றும் கடந்த ஆண்டுகளில் நலத்திட்டத்திற்காக 15 லட்ச ரூபாயை செலவளித்திருக்க வேண்டும். வெளிநாட்டு நிதியுதவிகளை பெறுவதற்காக அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பிக்கும் நிறுவனம், நிதியுதவி பெறுவதற்காக செலுத்த வேண்டிய கட்டணத்தையும் அரசு உயர்த்தி உள்ளது. இவ்வாறாக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here