‘எங்க புல்லிங்கோ எல்லாம் பயங்கரம்’ – குத்தாட்டம் போடும் பிக் பாஸ் பிரபலங்கள்!!

0

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பிரபலங்களும் சேர்ந்து குத்தாட்டம் போடும் ரீல்ஸ் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சியின் 4 சீசனில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் ஒன்று கூடிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் அனைவரும் தனி தனி அணியாக பிரிந்து தங்களது நடன திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அந்த நிகழ்ச்சிக்கு பாகுபலி புகழ் ராஜமாதா ரம்யாகிருஷ்ணன் மற்றும் நடிகரும் பாடகருமான நகுல் ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்து வருகின்றனர். தற்போது இணையத்தில் மிக ட்ரெண்ட் ஆக இருந்து வருவது ரீல்ஸ் வீடியோ தான். அவ்வப்போது பிபி ஜோடியில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவரும் ரீல்ஸ் செய்து அதனை வெளியிட்டு வந்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் மீண்டும் ஓர் வீடியோ பதிவினை பி பி ஜோடிகளின் பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி ‘எங்க புல்லிங்கோ எல்லாம் பயங்கரம்’ என்னும் பாடலுக்கு தற்போது கேபி, சம்யுக்தா, பாலா, ஆஜித் உள்ளிட்டவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here