அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய் இறப்பு விகிதம் – மாநிலங்களின் பட்டியல் வெளியானது

0

கொரோனா தாக்கத்தை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. கோவிட் -19 லிருந்து மீண்டவர்களுக்கு அதிகளவில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறிய நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் இறப்பு பதிவான மாநிலங்களின் பட்டியல் வெளியானது.

கருப்பு பூஞ்சை நோய் :

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோவிட் -19 லிருந்து மீண்டவர்களுக்கு அதிகளவில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு என்பது குறுப்பிடத்தக்கது. பொதுவாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். இவ்வகை கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி, கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் குறைந்தது 7,250 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் 219 பேரைக் கொன்றுள்ளது. மகாராஷ்டிராவில் 90 பேர் ,குஜராத்தில் 61 பேர்,மத்திய பிரதேசத்தில் 31 இறப்புகளும்,டெல்லியில் ஒரு இறப்பு என இதுவரை 219 பேர் நோய் பாதிப்பால் இறந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here