கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜய் டிவி டிடி – வைரலாகும் புகைப்படம்!!

0

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான டிடி அனைவர்க்கும் முன்னுதாரணமாக இருக்க கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

விஜய் டிவி டிடி

கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை பாதித்து வருகிறது. முதல் அலையில் இருந்து முழுவதுமாக நாடு மீண்டு வர இப்படி இரண்டாவது அலையின் தாக்கத்தின் வீரியம் இந்த அளவிற்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த கொரோனாவால் மக்கள் பலரும் தங்களது உயிரையும் இழந்து வருகின்றனர்.

இதற்கு எப்பொழுது விடிவு காலம் வரும் என்று பலரும் பிரார்த்தனையும் செய்துகொண்டுள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் மக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் பல அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் மக்களுக்கு முன்னுதாரமாக இருக்க தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான டிடி தற்போது கொரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here