தியேட்டரா? ஓடிடியா? ச்சா ச்சா., அதுக்கும் மேல straight டிவி தான்.., நேரடியாக தனியார் சேனலில் ரிலீசாகும் பிக் பாஸ் ஆரி திரைப்படம்!!

0
தியேட்டரா? ஓடிடியா? ச்சா ச்சா., அதுக்கும் மேல straight டிவி தான்.., நேரடியாக தனியார் சேனலில் ரிலீசாகும் பிக் பாஸ் ஆரி திரைப்படம்!!
தியேட்டரா? ஓடிடியா? ச்சா ச்சா., அதுக்கும் மேல straight டிவி தான்.., நேரடியாக தனியார் சேனலில் ரிலீசாகும் பிக் பாஸ் ஆரி திரைப்படம்!!

பிக்பாஸ் ஆரி அர்ஜுன் நடிக்கும் “எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் ஆரி அர்ஜுனன். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு மக்களிடைய அதிக அளவில் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, டைட்டிலையும் அடித்து சென்றார். தற்போது புதுமுக இயக்குனர் யு.கவிராஜ் படைப்பில் உருவாகும் ஏலியன் திரைப்படமான “எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்” என்ற படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த மூன்று வருடங்களாக உருவாகி வரும் இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.

வாட்ஸ்அப் பயனர்களே., இதோ உங்களுக்கான சூப்பர் அப்டேட்., இனி டெஸ்க்டாப்பில் வீடியோ கால் பேசலாம்!!

இது குறித்து நடிகர் ஆரி பேசியதாவது, இப்படத்தில் என்னை நடிக்க அழைத்த இயக்குனர் யு.கவிராஜ்-க்கு நன்றி. இப்படம் என்னுடைய சினிமா கேரியரில் முற்றிலும் மாறுபட்ட படம். அப்பேற்பட்ட படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக மக்கள் பார்வைக்கு வர போவதை நினைத்தால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இது ஒரு ஏலியன் திரைப்படம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here