ஒன்னு நான் இருக்கனும்.., இல்ல அவங்க இருக்கனும்.., பூர்ணிமா முதுகில் குத்திய மாயா.., பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு!!

0
பூர்ணிமா முதுகில் குத்திய மாயா பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. நேற்று அதிரடியாக அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேறிய நிலையில், விஜய் மற்றும் அனன்யா உள்ளே என்ட்ரி கொடுத்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடனே மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் சீசனில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த ஓபன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

அதன்படி சரவணன் விக்ரமை மணி, ஜோவிகா மற்றும் நிக்சன் நாமினேட் செய்தார்கள். அதே போல் அனன்யாவை  அர்ச்சனா, விஷ்ணு மற்றும் பூர்ணிமா நாமினேட் செய்கிறார்கள். மேலும் பூர்ணிமாவை அனன்யா, மணி மற்றும் மாயா நாமினேட் செய்கிறார்கள். இதில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பூர்ணிமாவை மாயா நாமினேட் செய்தது தான். நாமினேட் செய்த பின்னர் மாயா ஒண்ணு நான் இங்க இருக்கனும் இல்லை பூர்ணிமா இருக்கனும் என்று கூறுகிறார். அவர் கூறியதை கேட்ட பூர்ணிமா அழுகும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here