முதன்முறையாக பிக் பாஸ் வீட்டின் தலைவராகும் ஆரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு நாட்கள் குறைவாக இருக்க போட்டிகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது முதன்முறையாக ஆரி தலைவர் போட்டியில் கலந்து கொள்கிறார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தொடர்ந்து சோம், ரியோ தங்களின் முழு பங்களிப்பையும் அளித்து வருகின்றனர். ரியோ இரண்டு நாட்களாக தனது முழு திறமையையும் காட்டி வருகிறார். நேற்றைய எபிசோடில் 300 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்று அடுத்த வார தலைவருக்கான போட்டியில் நேரடியாக இடம் பிடித்தார். அனிதா கண்டிப்பாக இந்த வாரம் வெளியேறப் போவது உறுதியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைவரும் நாமினேஷனுக்கு சரியான ஒரு ரீசனை எடுத்து வைக்க தேவையே இல்லாமல் பாலாவை நாமினேட் செய்தார். இதனை சோம் கண்டு கொள்ளவே இல்லை. அடுத்ததாக ரியோ வந்து பேச ‘வழக்கம் போல காமெடி பண்ணிட்டு போறாரு’ என்று முணுமுணுக்க ரியோ என்ன என்று கேட்க அது என் இஷ்டம் என்று திமிராக பதில் சொன்னார். இது பலருக்கும் எரிச்சலை உண்டுபண்ணியது.

அன்றைக்கு ‘கத்த கூடாது நான் பேனிக் ஆவேன்’ என்று ஏக வசனம் பேசும் அனிதா தொடர்ந்து வீட்டில் கத்திக்கொண்டு தான் உள்ளார். இப்பொழுதெல்லாம் ‘புஷ்பா புருஷன்’ என்ற சொல்லை விட ‘அனிதா புருஷன்’ என்பது தான் வைரலாகி வருகிறது. இத்தனை வருடம் செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்த அனிதா சுத்தமாக தனது பெயரையே கெடுத்துக்கொண்டார்.

தெலுங்கில் வெளியான மாஸ்டர் ‘சிட்டி ஸ்டோரி’ பாடல்

இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோவில் ஆட்டம் பாட்டம் என களைகட்டுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். கேக், பிரியாணி என ஆரவாரத்துடன் ப்ரோமோ வெளியானது. அடுத்த ப்ரோமோவில் வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றுள்ளது.

அதாவது தெர்மாகோல் பால்ஸை வாயால் ஸ்பூனில் எடுத்து மற்றொரு பௌலில் நிரப்ப வேண்டும். யார் முதலில் நிரப்புகிறார்களோ அவர்களே இந்த வார தலைவர். ஆரி அதனை நிரப்பிவிட்டு அவரே இந்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இத்தனை வாரங்கள் நாமினேஷனில் மட்டுமே இருந்து வந்த ஆரி முதன்முதலாக தலைவராகிறார். இது ரசிகர்களை சந்தோசமாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here