கடைசி நேரத்தில் விஜய் டீவியை கழட்டி விட்ட ஓவியா – சோகத்தில் பிக் பாஸ் ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியாவினை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையில் ஓவியா அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே பிக் பாஸ் சீசன் 5 நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 30 ஆம் தேதி அன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி பல முக்கிய மாற்றங்களுடன் முக்கியமாக 24 மணி நேரமும் நேரலையாக OTT தளத்தில் மக்கள் பார்க்கும் படி வெளியாகவுள்ளது. 60 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அந்த வகையில் சினேகன், வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, ஓவியா, பாலா, அனிதா என 16 போட்டியாளர்கள் பங்குபெற போவதாக தகவல் வெளியாகியது. பிக் பாஸ் முதல் சீசனை கலக்கிய ஓவியாவை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஓவியாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் ஓவியா பங்குபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here