வனிதா மாதிரி அப்படியே இருக்கீங்களே.., சும்மா  இருந்தவரை சீண்டி  பார்த்து வெறுப்பேற்றிய ராபர்ட் மாஸ்டர்!!

0
வனிதா மாதிரி அப்படியே இருக்கீங்களே.., சும்மா  இருந்தவரை சீண்டி  பார்த்து வெறுப்பேற்றிய ராபர்ட் மாஸ்டர்!!

கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சொன்னதற்கு கிரிக்கெட் வீரரும் மாடலுமான ராம் ராமசாமி லைட்டாக டென்ஷன் ஆகியுள்ளார்.

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்:

கோலிவுட்டில் பல படங்களுக்கு நடனம் இயக்குனராக கலக்கியவர் தான் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். அந்த வகையில் குத்து, சுறா, சிலம்பாட்டம் போன்ற பல படங்களில் இடம்பெற்ற பாடல்களில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். தற்போது விஜய் டிவியின் புகழ்பெற்ற பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவருடன் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் நாள் இரவில் ஜிபி முத்துவை பயமுறுத்தி டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் விளையாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வந்த ராம் ராமசாமியை மாஸ்டர் கலாய்த்துள்ளார்.

நயன் விக்கி பதிவை கண்டு வரிஞ்சு கட்டிக்கிட்டு களமிறங்கிய வனிதா – ஆக்ரோஷத்துடன் அவரே போட்ட பதிவு!!

அதாவது அவர் பார்க்க தான் பாகுபலி பிரபாஸ் மாதிரி இருப்பார், ஆனா முகத்தை பார்த்தால் கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் மாதிரியே இருக்காரு என்று கிண்டலடித்துள்ளார். அதற்கு ராம் ராமசாமி ஏதற்காக அவரோட என்னை கம்பேர் பண்ணுறீங்க என்று லைட்டாக காண்டாகி உள்ளார். ஆரம்பித்து ஒரு நாள் தான் ஆகுது அதுக்குள்ள சண்ட போட ஆரம்பிச்சுட்டாங்களே!.. அப்ப போக போக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்க போகுது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here