ஹேமா பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா…!விழிபிதுங்கி நிற்கும் சௌந்தர்யா,வேணு!!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு சில வருடங்களாக ஏராளமான ரசிகர்களை பெற்று விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இன்றைய கதையில் ஹேமா தன்னுடைய குழந்தை தான் என சந்தேகித்து, வேணு மற்றும் சௌந்தரியாவிடம் இது பற்றி கேட்கிறார் கண்ணம்மா.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என்ற மிக பெரிய உண்மையை அஞ்சலி அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைக்கிறார். இதை கேட்கும் கண்ணம்மா அதிர்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் இன்றைய கதைக்களமாக, லட்சுமி அஞ்சலியிடம் இவங்க டாக்டர் அங்கிலோட மனைவி இல்லையா? என கேட்கிறார்.

அதற்கு அஞ்சலி இல்லை அவங்க இரண்டு பேரும் வெறும் நண்பர்கள் தான் என கூறுகிறார். அதன் பின்னர், கண்ணம்மா கண் ஜாடை மூலம் சௌந்தர்யாவிடம் கேட்கிறார். அப்பொழுது சௌந்தர்யாவும் ஆமாம் என்கிறார். அதனை பின்னர் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண் வெம்பாவை சரமாரியாக திட்டுகிறார். அதற்கு சௌந்தர்யா என் பையன் தெரியாமல் பண்ணிட்டான் என கூறி சமாதானம் செய்கிறார்.

இந்நிலையில் கண்ணம்மா வெண்பாவை ஏளனத்துடன் பார்த்தபடி இருக்கிறார். அப்பொழுது அஞ்சலி தனக்கு நலங்கு வைக்குமாறு கண்ணம்மாவை அழைக்கிறார். இதையடுத்து பாரதி மற்றும் கண்ணம்மா இணைந்து அஞ்சலிக்கு நலங்கு வைக்கின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அணைத்து சடங்குகளையும் அஞ்சலிக்கு செய்து ஆசீர்வாதம் செய்கின்றனர்.

இவை அனைத்தையும்  கோபம் மற்றும் எரிச்சலுடன் வெண்பா தள்ளியிருந்து பார்த்து கொண்டிருக்கிறார். அதன் பின்னர் அகில் அஞ்சலிக்கு நலங்கு வைக்கிறார். அதன் பிறகு வெண்பாவிடம் எங்கள் குடும்பத்தை சேர்த்து வைத்து ஒரு போட்டோ எடுக்குமாறு சௌந்தர்யா கூறுகிறார். அதன் பின்னர் சௌந்தர்யா மற்றும் வேணு வளைகாப்பில் நடந்ததை பற்றி மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வேளையில் கண்ணம்மா அங்கு வருகிறார். இந்நிலையில் கண்ணம்மாவை பேசவிடாமல் சௌந்தர்யா தப்பித்து ஓட முயற்சிக்கிறார். அப்பொழுது கண்ணம்மா என்னை பார்த்து ஏன் இப்படி ஓடுறீங்க எனவும், எனக்கு பதில் சொல்லணும் பயந்து ஓடுறீங்களா? எனவும் அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கிறார். அதன் பின்னர் அப்படி எல்லாம் இல்லை என சமாளித்து வருகிறார் சௌந்தர்யா.

 அதற்கு கண்ணம்மா அப்போ நான் இப்ப கேட்கிற  கேள்விக்கு பதில் சொல்லுங்கள் கூறுகிறார். உடனே கண்ணம்மா, சௌந்தர்யா பார்த்து, பாரதி மற்றும் வெண்பாவுக்கு கல்யாணம் ஆகவில்லை என்கிற உண்மையை ஏன் மறைசீங்க என கேட்கிறார். அதற்கு வேணு பாரதி சௌந்தர்யா கிட்ட சத்தியம் வாங்கியதாகவும், அதனால தான் சொல்லவில்லை எனவும், தற்போது அதை அஞ்சலி சொல்லிவிட்டாள் என்று கூறுகிறார்.

அதற்கு கண்ணம்மா, பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகவில்லை என்றால், அப்போ ஹேமா யார்? ஹேமாவின் அம்மா யார்? என தொடர்ச்சியாக கேள்விகள் மேல் கேள்விகள் கேட்கிறார். அதற்கு சௌந்தர்யா, ஹேமா அனாதை ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து வளர்க்கும் குழந்தை என கூறுகிறார். அப்பொழுது கண்ணம்மா,ஹேமா அப்படியே என்னை மாதிரியே இருக்கிறார். மேலும் அவளுக்கு நான் என்றால் உயிர், அவளும் எப்போதும் என் கூடவே வந்து இருக்கிறார். அவளை பார்க்கும் போது பெற்ற பிள்ளையை பார்த்தது போல் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது என கூறுகிறார்.

 அதற்கு சௌந்தர்யா அதை நீ கடவுளிடம்  கேட்க வேண்டிய கேள்வியை, நீ என்கிட்ட கேட்காதே என கூறுகிறார். அதன் பின்னர் டாக்டர் என்னிடம் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என கூறியதாக கண்ணம்மா கூறுகிறார். என்னுடைய இன்னொரு குழந்தை எங்கே என கேட்கிறார். மேலும்  என்னுடைய இன்னொரு குழந்தை தான் ஹேமா, அவளை தான் நீங்க  ஆதரவற்ற குழந்தை என கூறி பாரதியிடம் வளர்க்க சொல்லிருக்கீங்க எனக் கூறுகிறார். மேலும் ஹேமா நான் பெற்ற குழந்தை என கூறுகிறார். இவ்வாறு இன்றைய கதை நிறைவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here