கோடநாடு கொலை வழக்கு – முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் ஓட்டுநர் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை!!

0

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்தகட்டமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜனின் உறவினர்களிடம் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோடநாடு கொலை வழக்கு:

உதகமண்டலத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கானது இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் இந்த எஸ்டேட்டின் காவலாளியான ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவிற்குள் சென்று அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளிகளை தற்போது விசாரித்து வருகின்றது.

இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாயன் மற்றும் வாளையாறு மனோஜ் என்பவர் கைது செய்யப்பட்டார் . மேலும் இந்த கொலைவழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் கார் விபத்தில் ஜெயலலித்தாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

தற்போது கனகராஜின் சகோதரிடம் மறுவிசாரணையை மேற்கொண்டனர். மேலும் அவரின் உறவினர்களுடன் விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விசாரணையில் பெண்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது இதனால் போலீசாரின் விசாரணைப்படையில் பெண்காவலர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக கோவை பந்தைய சாலையில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் 5 தனிப்படைகளை அமைத்து விசாரணையானது நடைபெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here