மூர்த்தியின் ஏற்பாட்டில் கண்ணனுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் அடகு கடை முதலாளி…!பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய கதைக்களம்!!!

0

விஜய் டிவியின் வெற்றி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் இன்று, மூர்த்தியின் ஏற்பாட்டின் பெயரில் கண்ணனுக்கு வட்டிக்கு பத்தாயிரம் கொடுத்து உதவுகிறார் அடகு கடை முதலாளி. அதை நினைத்து நெகிழ்கிறார் கண்ணன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவின் செயினை அடகு வைக்க அடகு கடைக்கு செல்கிறார் கண்ணன். இந்த விவரத்தை அடகு கடை முதலாளி மூலம் அறியும் மூர்த்தி அவருக்கு பணம் கொடுத்து உதவ சொல்கிறார். இந்நிலையில் இன்று, கதிர் மற்றும் முல்லை ஹாஸ்பிடலில் முல்லையின் அம்மா பற்றியும், அக்கா பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் மல்லிகா வந்ததுனால தான் இவ்வளவு பிரச்சனை என கூறுகிறார் முல்லை. அப்பொழுது கர்ப்பமடைந்த ஒரு பெண் வருவதை பார்த்து இருவரும் சந்தோஷபடுகின்றனர். மேலும் முல்லை கர்ப்பம் அடைந்தால் எவ்வாறு கவனித்து கொள்வேன் என்பதை பற்றி கதிர் முல்லையிடம் கூறிக்கொண்டிருக்கிறார். மேலும் குழந்தை பெற்று கொள்வது பற்றி மிகவும் ஆசையாக இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து நகையை மீட்க கண்ணன் மற்றும் சதீஷ் இருவரும் அவசர அவசரமாக கடைக்கு வருகின்றனர். அப்பொழுது கடையின் முதலாளி மூர்த்தியின் தம்பி தான நீங்க, ஏன் இப்படி பண்ணீங்க என கேட்கிறார்.

மேலும் பத்தாயிரம் பணத்தையும் செயினையும் கொடுத்து இது உன்னுடைய அண்ணன் மூர்த்திகாக தருகிறேன். இதற்கு மாதம் 400 ரூபாய் வட்டி தர வேண்டும் என கூறுகிறார். இதை கேட்கும் கண்ணன் அதிர்ச்சியோடு அங்கிருந்து கிளம்புகிறார். இதையடுத்து அடகு கடை முதலாளி கண்ணனுக்கு பணம் கொடுத்த விவரத்தை மூர்த்தியிடம் கூறுகின்றனர்.

அதன் பின்னர் லட்சுமியை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். வீட்டிற்கு வந்த லட்சுமியிடம் அனைவரும் இன்னும் உடம்பு தான் சரியவில்ல இன்னும் கொஞ்ச நாள் ஹாஸ்பிடல இருக்க வேண்டியது தானே என கேட்கின்றனர். அதன் பின்னர் கயலை பாப்பாவை அழைத்து வர சொல்லி அவளை கொஞ்சி கொண்டிருக்கிறார் லட்சுமி.

குழந்தையும் லட்சுமி மடியில் அமர்ந்து கொண்டு சந்தோஷமாக அனைவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது. அதன் கதிர்,ஜீவா என அனைவரையும் அழைத்து தன்னருகில் வைத்து கொண்டு கண்கலங்கிய படி பேசுகிறார் லட்சுமி.

அதன் பின்னர் ஜீவா மற்றும் மீனா வீட்டில் நடந்தை பற்றி பேசிக்கொண்டே ரொமான்ஸ் செய்கின்றனர். மேலும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா பற்றி காமெடியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here