வானவில்லின் துப்பட்டாவை அணிந்து வந்து தேவதை போல காட்சியளித்த பாரதி கண்ணம்மா பிரபலம்… வைரலாகும் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்!!!

0

பாரதி கண்ணம்மா சீரியல், கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு முதல் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வருபவர்  ரோஷினி ஹரிப்ரியன். இவர் தற்போது ஓணம் ஸ்பெஷலாக புடவையில் தாறுமாறான  அழகில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒரு வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முக்கிய கதாபத்திரங்களான பாரதி, கண்ணம்மா, அஞ்சலி, அகிலன் ஆகியோருக்கு இதுவே முதல் சின்னத்திரை அறிமுகமாகும். எனினும் இந்த சீரியல் TRP ரேட்டிங்கில் எப்பொழுதும் டாப் தான். மேலும் இந்த சீரியல் பிற மொழியின் ரீமேக் சீரியல் ஆகும்.

மேலும் இந்த சீரியலில் கணவன் சந்தேகத்தால் கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து, இரட்டை குழந்தைகளை பெற்று எடுக்கிறார். அதிலும் ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கு தெரியாமல் அவரின் மாமியார் எடுத்து சென்று வளர்க்கிறார். இந்நிலையில் இவ்வாறு துன்பங்கள், துயரங்கள் நிறைந்த ஒரு நடுத்தர பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக புடவையில் கொள்ளை அழகில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here