பட்டாலும் புத்தி வராமல் வெண்பாவிடம் அனைத்து உண்மைளையும் ஒப்பிக்கும் பாரதி.. இன்றைய பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மாவில், பாரதியிடம் கண்ணம்மா உதவி கேட்டும் அவர் திமிராகவே பேசுகிறார். உனக்கு பிரசவம் பார்த்தது நான் தான் என்ற உண்மையையும் உடைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மாவில், தொடர்ந்து பாரதி நம்பாமல் பேசுவதால், DNA டெஸ்ட் எடுக்க பாரதியை கண்ணம்மா அழைக்கிறார். பாரதி பிடிகொடுக்காமல் உனக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் அது எனக்கு பிறக்கல என்று கோவத்துடன் அங்கிருந்து செல்கிறார். பின்னர் துளசியை வரவேழைத்து கண்ணம்மா தனக்கு பிரசவம் பார்த்தது யார் என்று கேக்க கடைசியில் பாரதி என்று ஒத்துக்கொள்கிறார்.

தன் கூட இருந்தவர்களே இந்த உண்மையை தன்னிடம் சொல்லவில்லை என வேதனைப்படுகிறார் கண்ணம்மா. அதை தொடர்ந்து, அகிலன் வெண்பாவை திட்டி தீர்த்துக்கொண்டிருக்கிறார். அஞ்சலியிடமும் அவ 1000 பாம்புகளுக்கு சமம். அவள எப்பவும் நம்பவே நம்பாத என்று சொல்கிறார்.

அஞ்சலி வெண்பா கொடுக்கும் மாத்திரைகளை போய் நம்ம சாப்பிடுறோமே என்று யோசிக்கிறார். பின்னர் யார் சொல்லியும் அடங்காமல் வெண்பா வீட்டிற்கு பாரதி சென்று, கண்ணம்மா தன்னை அழைத்ததையும், இரட்டை குழந்தை விஷயத்தையும் சொல்கிறார். இதை கேட்ட வெண்பா ஷாக் ஆகிறார்.

ஆனால் பாரதி, ஒரு குழந்தை தான் பிறந்துச்சு என்று அடித்து சொல்வதை பார்த்து, அது எப்படி இவ்வளோ உறுதியா சொல்லுற என்று வெண்பா கேக்கிறார். அப்பொழுதுதான் நான் தான் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்ததாக சொல்கிறார். வெண்பா தலையில் இடி விழுந்தபோல் ஆகிறது.

ஆனால் வெண்பா பற்றி கண்ணம்மா சொன்ன எதையும் பாரதி சொல்லவில்லை. இதனால் தன்னை பற்றிய உண்மை தெரியவில்லை என வெண்பா மகிழ்ச்சியடைகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here