அஜித் உச்சத்தை தொட இந்த பிரபலம் தான் உதவினாரா?? இத்தனை நாள் இது தெரியமா போச்சே!!

0

தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த அஜித் இப்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ட்ரைலர், பாடல்கள் அண்மையில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. வரும் பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமைய உள்ளது. இப்படி சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எல்லோருக்கும் ஹீரோக்களுக்கும் ஆரம்பத்தில் ஹிட் படங்களில் கொடுப்பது மிகவும் கடினமான ஒன்று தான். அந்த வகையில் அஜித்துக்கும் ஆரம்பத்தில் பல படங்கள் சொதப்பலாகவே அமைந்தது என்று கூறலாம். ஆனால் இவரது சினிமா கேரியரை புரட்டிப் போட்ட படம் என்றால் அமராவதி திரைப்படம் தான். இந்த படம் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் அஜித்தும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். அதற்கு காரணம் இயக்குனர் பாக்கியராஜ் தான் என்று சொல்லப்படுகிறது.

கண்ணம்மாவை ஒதுக்கிவிட்டு பாரதியுடன் கூட்டணி வைத்த லட்சுமி.., அதிர்ச்சியில் உறைந்த ஹேமா!!!

அதாவது தெலுங்கு இயக்குனர் கோல்லுபுடி மாருதிராவ் இயக்கத்தில் வெளியான இப்படத்தை முதலில் அவரது மகன் ஸ்ரீநிவாஸ் இயக்கினார். ஆனால் இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் போது ஸ்ரீநிவாஸ் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரது இழப்பை தாங்க முடியாத கோல்லுபுடி மாருதிராவ் மகனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். அப்போது தான் பாக்கியராஜிடம் அமராவதி படத்தின் கிளைமாக்ஸில் தனது மகன் பற்றி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாக்யராஜூம் அதை ஏற்றுக் கொண்டு படத்தின் முடிவில் அவரது மகனை வைத்து கதை அமைக்க எதிர்பாராத அளவுக்கு படம் ஹிட் அடித்தது. இதன் மூலம் அஜித்தும் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றார். பாக்கியராஜ் மட்டும் அன்றைக்கு இந்த உதவி செய்யவில்லை என்றால் அஜித் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் அஜித்தின் வளர்ச்சிக்கு பாக்கியராஜ் ஒரு முக்கிய காரணமாக உள்ளார். இந்த விஷயம் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here