உலக மகளிர் தின கொண்டாட்டம் – ஆளுமை மிக்க பெண் தலைவராக தமிழிசை தேர்வு!!

0

வருகிற மார்ச் மாதம் 8ம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது இதனை முன்னிட்டு தமிழிசைக்கு ஆளுமை மிக்க பெண் தலைவர் என்ற விருது வழங்கப்படவுள்ளது.

உலக பெண்கள் தினம்:

ஆண்டு தோறும் உலக பெண்கள் தினம் மார்ச் மாதம் 8ம் தேதி அன்று மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டும் அதே முறையில் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் தங்களது துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு ஓர் விருதினை வழங்குவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்கான விருதினை வருகிற மார்ச் மாதம் 7ம் தேதி அன்று சிகாகோ இலியானஸ் நகரில் நடைபெறும் விழாவில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் காணொளி மூலம் விருதினை வழங்க உள்ளார். இந்த விழாவில் அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதினை வழங்க உள்ளனர்.

‘இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்’ – அதிபர் ஜோ பைடன் புகழாரம்!!

மேலும் இந்த வருடம் உலக சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் விருதினை வழங்கவுள்ளார். அந்த வகையில் இந்த விருதுக்கு புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முதல் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும், இரண்டாவது விருது தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசைக்கும் வழங்கப்படவுள்ளது. மொத்தம் இந்த விழாவில் 20 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. தற்போது தமிழிசைக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here