வாத்தி கமிங் பாடலை ஓரங்கட்ட வரும் பீஸ்ட் சிங்கிள் அப்டேட் – டான்ஸ் மாஸ்டர் வெளியிட்ட தகவல்!!

0

பீஸ்ட் படத்தின் நடன இயக்குனரான ஜானி தற்போது இந்த திரைப்படத்தின் பாடல் குறித்தான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். அது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் அடுத்த அப்டேட்:

விஜய்யின் 65ஆவது திரைப்படமான பீஸ்ட் திரைப்படம் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது.

புட்ட பொம்மா, ரவுடி பேபி மற்றும் பல ஹிட் பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர் ஜானி தான் பீஸ்ட் திரைப்படத்திற்கும் நடனம் அமைத்துள்ளார். விஜய் நடித்த அனைத்து படங்களிலுமே விஜய்யின் நடனம் பெரிதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் புட்ட பொம்மா பாடலை தூக்கி சாப்பிடும் அளவுக்கு உருவாக்கபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களின் ஆர்வத்தை இது மேலும் தூண்டியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here