என்னது பீஸ்ட் பட தீம் மியூசிக்கும் காப்பியா?? சர்ச்சையில் சிக்கும் அனிரூத்! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0
என்னது பீஸ்ட் பட தீம் மியூசிக்கும் காப்பியா?? சர்ச்சையில் சிக்கும் அனிரூத்! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
என்னது பீஸ்ட் பட தீம் மியூசிக்கும் காப்பியா?? சர்ச்சையில் சிக்கும் அனிரூத்! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில், உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள தீம் மியூசிக் ஒரு படத்தின் காப்பி என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அனைத்து பணிகளும், நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 13ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. படத்தில் இடம்பெற்றிருந்த 2 பாடல்களும் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதில், அரபிக் குத்து பாடல் மட்டும் இதுவரை யூடியூப் தளத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள, இந்த படத்தின் பாடல் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள தீம் மியூசிக் வேறு ஒரு படத்தின் காப்பி என குற்றம் சாட்டப்பட்டு, இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ரஜினியின் சும்மா கிழி, அஜித்தின் ஆலுமா டோலுமா உள்ளிட்ட பல பாடல்கள் சர்ச்சையில் உள்ள நிலையில், இந்த தீம் இசையும் காப்பி என பேசப்படுவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here