மீண்டும் தோனி தலைமையில் இந்திய அணி.., அப்போ T20 உலக கோப்பைக்கு வரது கன்பார்ம்!!

0
மீண்டும் தோனி தலைமையில் இந்திய அணி.., அப்போ T20 உலக கோப்பைக்கு வரது கன்பார்ம்!!
மீண்டும் தோனி தலைமையில் இந்திய அணி.., அப்போ T20 உலக கோப்பைக்கு வரது கன்பார்ம்!!

ஆசிய கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து T20 உலக கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடை போடும் டிராவிட்!!

ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் அனைவரும் நினைத்த வேளையில் பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, BCCI க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் T20 உலக கோப்பையில் இந்திய அணியை வெற்றியடைய செய்யும் வகையில் பல முயற்சிகளை BCCI மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆஸ்திரேலிய அணியுடனும், தென் ஆப்பிரிக்கா அணியுடனும் விளையாட உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் T20 உலக கோப்பை தொடருக்கு BCCI புதிய திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது T20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் மெண்ட்டராக தோனி நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் தோனி கடந்த 2021 இல் நடந்த T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் மென்டராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த வருடமும் தோனி களமிறங்க உள்ள நிலையில் அதை பயிற்சியாளரான டிராவிட் விரும்பவில்லை என்ற விஷயமும் வெளிவந்துள்ளது.

ஏனென்றால் டிராவிட் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது லட்சுமணன் இந்திய அணியை வழி நடத்தினார். அதன் பிறகு இவர் உடல்நிலை சரியானதை அடுத்து அவர் துபாய் வந்து இந்திய அணி மீண்டும் வழி நடத்த ஆரம்பித்தார். இதனால் அவரது இடத்திற்கு தோனி வருவது டிராவிட்டுக்கு பிடிக்கவில்லை. இதனால் BCCI டிராவிட்டிடம் ஒப்புதல் கேட்டபோது அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here