சூர்யா குடும்பத்தில் உதிக்கும் புதிய சாதனையாளர்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் பிரம்மாஸ்திர படத்தின் நாயகியாக நடித்திருக்கும் ஆலியா பட்டுக்கு நடிகர் சூர்யா தங்கை பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

பாடகி பிருந்தா:

தமிழ் சினிமாவில் வாரிசு அடிப்படையில் பல நடிகர் நடிகைகள் உருவாகி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசன், விஜயகுமார் மற்றும் சிவக்குமார் குடும்பங்கள் வாரிசு வாரிசாக சினிமா துறையில் நடித்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் 70, 80களில் ஹீரோவாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு அவருடைய மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிவகுமார் மகளான பிருந்தாவும் சில படங்களில் பாடல்களை பாடி சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிருந்தா பாடுவது மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்துள்ளார்.

அதாவது, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டி வரும் திரைப்படம் பிரம்மாஸ்திரம். இந்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கதாநாயகியான ஆலியா பட்டுக்கு தமிழில் பாடகி பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதன் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக அடுத்தடுத்து களமிறங்க இருக்கிறார். இதுகுறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சி மழையை பொழிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here