துவண்டுபோன பாரதி கண்ணம்மா சீரியலை தூக்கி நிறுத்த வந்த வெண்பா – இனி கோபி மச்சானுக்கு ஆப்பு தான்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் வெண்பா. துவண்டு இருந்த சீரியல் மீண்டும் தலையெடுக்க ஆரம்பிக்க இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பமாக வெண்பா சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். வெண்பா இல்லாத சீரியல் ஒரு சுவாரசியம் இல்லாமலே இருந்தது. முக்கிய பிரபலமான ரோஷிணியும் சீரியலை விட்டு விலகியதால் டிஆர்பி ரேட்டிங்கில் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த சில வாரங்களாகவே 3 ஆம் இடத்தை தான் பிடித்திருந்தது. என்னடா சீரியல் இப்படி போரா போயிட்டு இருக்கே என்று யோசித்து கொண்டிருந்த வெளியில் இப்பொழுது வெண்பா அதிரடியாக களமிறங்கியுள்ளார். அது எப்படி கண்ணம்மாவுக்கு குளிர் விட்டு போச்சா என்று பழையப்படி அந்த ஆணவ சிரிப்புடனேயே என்ட்ரி கொடுத்துள்ளார். துவண்டு போன சீரியல் மீண்டும் தூக்கி நிறுத்த வெண்பா வந்து விட்டார் என்று பலரும் கமன்ட் செய்தும் வருகின்றனர்.  மேலும் பாக்கியலட்சுமி சீரியல் தான் சில காலமாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. இனி பாரதி கண்ணம்மாவிற்கும் பாக்கியலட்சுமிக்கு ஒரு டஃப்பான வார் கண்டிப்பாக இருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here