முக்கிய பிரபலத்துடன் நடித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் – காட்டுத்தீயாய் பரவும் செய்தி!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அகிலன் பற்றிய தெரியாத தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளனர்.

பாரதி கண்ணம்மா அகிலன்

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதிக்கு எப்பொழுது கண்ணம்மாவை பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரியவரும்?? இருவரும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் சீரியலை பார்த்துக்கொண்டுள்ளனர். பாரதிக்கு அடுத்து மக்கள் மத்தியில் நிலைத்தவர் அகிலன் தான். தன் அண்ணி தவறு செய்திருக்க மாட்டார் என்று ஆணித்தரமாக கூறி குடும்பத்தினரிடமே சண்டையிட்டார். இதனாலேயே பாரதிக்கு அடுத்து அகிலனுக்கு நல்ல இடம் மக்கள் மத்தியில் கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் “உருளைக்கிழங்கு பைட்ஸ்” – செஞ்சு பாருங்க!!

சென்னையை சேர்ந்த அகிலன் இந்த சீரியலில் நடிக்கும் ரோஷினியின் (கண்ணம்மா) நெருங்கிய நண்பராம். கண்ணம்மா தான் பாரதி கன்னமாவில் அகிலனை நடிக்க ரெகமெண்ட் செய்துள்ளார். மாடலாக பணிபுரிந்த அகிலன் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பியார் பிரேமா காதல்’, ‘இறைவி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இறைவி திரைப்படம் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி இணைந்து நடித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன் பிறகு தான் இவர் சீரியலில் கால் பதித்துள்ளார். பாரதி கண்ணம்மா தான் இவருக்கு இந்த அளவிற்கு புகழை பெற்று தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here