மினுமினுப்பான கூந்தல் பெற வேண்டுமா?? இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

0

பெண்களுக்கு மினுமினுப்பான முடி மீது அதீதமான மோகம் இருக்கும் என்று தான் கூற வேண்டும். அதற்காக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமே இல்லை. இயற்கை முறையில் ஷைனிங் கூந்தலை பெறுவது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

மினுமினுப்பான முடியினை பெற

பெண்களுக்கு அழகே அவர்களது முடி என்று தான் கூற வேண்டும். அதனை பராமரித்து கொண்டே இருக்க வேண்டும். சிலருக்கு அழகான முடி இருக்கும். ஆனால், வேலைக்கு செல்வது போன்ற காரணங்களால் முறையாக பராமரிக்க முடியாமல் போய் விடும்.

குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் “உருளைக்கிழங்கு பைட்ஸ்” – செஞ்சு பாருங்க!!

இதன் காரணமாக முடி மினுமினுப்பாக இல்லாமல் மிகவும் வறண்டு போய் காட்சி அளிக்கும். இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • தயிர் – 2 டீஸ்பூன்
  • கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்

(குறிப்பு : உங்களது முடி அளவினை பொறுத்து பொருட்களை எடுத்து கொள்ளலாம்)

மேற்குறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கிண்ட வேண்டும். பின்பு, இதனை முடியின் வேர்க்கால்களில் இருந்து கடைசி நுனி வரை தடவ வேண்டும். அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவ வேண்டும். 45 நிமிடங்களுக்கு பிறகு இதனை மைலடான ஷாம்பு போட்டு அலசவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடி மினுமினுப்பாக மாறி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here