வெண்பா தன்னை கொல்ல நினைப்பதை அறிந்து கொள்ளும் அஞ்சலி – இன்றைய பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதிக்கு விவாகரத்து தருவது பற்றி யோசித்து கொண்டிருக்க மறுபுறம் அஞ்சலிக்கு வெண்பாவின் சூழ்ச்சிகள் தெரிய வருகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடில் கண்ணம்மாவின் மனசாட்சி கண்ணம்மாவிடம் விவாகரத்து தரவேண்டாம் என அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இது எதையும் கண்ணம்மா கேட்பதாக தெரியவில்லை. மறுபுறம் அஞ்சலிக்கு வெண்பா கொடுத்த மாத்திரைகள் தீர்ந்து விடுகிறது.

    

இனிமேல் அந்த மாத்திரைகளை போடக்கூடாது என அஞ்சலி யோசித்த சமயம் ஹேமா, அகிலன் மாத்திரைகள் வாங்கிக்கொடுத்ததாக அஞ்சலியிடம் தருகிறார். அப்பொழுது அஞ்சலி எதர்ச்சையாக இந்த மாத்திரைகளை போட்டால் நெஞ்சு வலி வரும் என ஹேமாவிடம் சொல்கிறார்.

ஆனால் ஹேமா தெளிவாக வலி வரக்கூடாதுன்னு தான மாத்திரை போடுவோம் என சொல்ல அப்பொழுது தான் அஞ்சலிக்கு புத்தியே வருகிறது. தீர்ந்தது தீர்ந்ததாகவே இருக்கட்டும் என முடிவெடுக்கிறார். பின்னர் வெண்பா கால் செய்து மாத்திரை டபுள் டோஸ் போடுறேல.. நெஞ்சு வலி வரலையே. என கேக்க அஞ்சலிக்கு வெண்பா ஏதோ கேம் ஆடுவது மட்டும் புரிகிறது.

அதன் பின்னர் ஹேமாவுடன் பாரதி எந்த வித கவலையும் இல்லாமல் விளையாண்டு கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் வேணு, சௌந்தர்யா நேற்று பாரதி மறைமுகமாக நம்மிடம் எதை சொன்னான் என பேசிக்கொண்டிருக்கொன்றனர். இந்த பக்கம் கண்ணம்மாவும் அதே குழப்பத்துடன் பாரதியுடன் சேர்ந்து எடுத்த பழைய போட்டோவை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அப்பொழுது லட்சுமி டாக்டர் அங்கிள் என தூக்கத்தில் புலம்ப வேகவேகமாக போட்டோவை உள்ளே வைக்கும் போது ஒரு பணக்கட்டு கீழே விழுகிறது. இதை பார்த்து கண்ணம்மா ஷாக் ஆக இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here