சந்தியா சரவணன் தியேட்டரில் நெருக்கமாக இருப்பதை பார்த்து அசிங்கப்படுத்தும் சிவகாமி – ராஜா ராணி 2 எபிசோட்!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியா குடும்பத்துடன் தியேட்டருக்கு வருகிறார். இதனால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ராஜா ராணி

சிவகாமி முதன் முதலாக தியேட்டருக்கு வர அனைத்தையும் பார்க்க எல்லாமே புதிதாக தெரிகிறது. மயில் ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் இருக்கிறார். குடும்பமே சந்தோஷமாக குதூகலத்தில் உள்ளது. அப்பொழுது சில ரவுடிகள் இரண்டு பெண்களைக் கேலி செய்து கொண்டிருக்க அதனை பார்த்து சந்தியா கோவம் அடைகிறார். வீட்டில் உள்ள அனைவரையும் உள்ளே போகச் சொல்லிவிட்டு அந்த ரவுடிகளை வெளுத்து வாங்குகிறார்.

தியேட்டரின் உள்ளே சென்ற குடும்பம் சந்தியாவை தேடிக் கொண்டுள்ளனர் அப்போது சரவணன் சந்தியாவை தேடி வெளியே வர அவர்களிடம் சண்டை போடுவதை பார்த்து அதிர்ச்சியாகிறார். என்ன பிரச்சனை என்று அந்த ரவுடிகளை அடிக்க செல்ல அந்த இரண்டு பெண்களின் அப்பா சந்தியா தன் பொண்ணுங்களுக்காக சண்டை போட்டார் என்று எடுத்துச் சொல்கிறார். மேலும் இந்த மாதிரியான பொண்ணு நான் பார்த்ததே இல்லை என்று சந்தியாவை பற்றி புகழாரம் கூறுகிறார்.

அப்பொழுது சரவணன் சந்தியா தியேட்டருக்குள் வந்து சற்று தூரமாக சென்று உட்காருகிறார். அப்பொழுது சந்தியாவின் கண்ணில் தூசி பட அதனைப் பார்த்த சரவணன் சந்தியாவின் கண்ணில் தூசி எடுத்து விடுகிறார் இதனை பார்த்த சிவகாமி இருவரும் எதோ தவறு செய்வது போல் நினைத்து கொள்கிறார். இதனை வேறு யாராவது பார்த்தால் தன் குடும்ப மானம் என்னாகும் என்று கோபப்பட்டு எல்லாரையும் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

யாருக்கும் எதுவுமே புரியாமல் சிவகாமி பின்னாலேயே செல்கின்றன. சிவகாமி வீட்டிற்கு சரியான கோபத்துடன் செல்கிறார் வீட்டில் உள்ள அனைவரும் என்னதான் பிரச்சனை சொன்னாதானே தெரியும் என்று சொல்ல சிவகாமி அதை எப்படி தன் வாயால் சொல்ல முடியும் என்று சொல்கிறார். சரவணன் தான் என்ன செய்தேன் என்று சொன்னால் தானே தெரியும் என்று சொல்ல தியேட்டரில் வைத்து அந்த அசிங்கம் தேவையா என்று கேட்கிறார்கள் சரவணனுக்கு அப்பொழுது தான் புரிகிறது.

தான் கண் தூசி தான் எடுத்து விட்டேன் என்று சொல்கிறார் ஆனால் அதை நம்புவதாக இல்லை. நீ எப்பவுமே சந்தியாவிற்கு சப்போர்ட் தான் பண்ணுவ எனக்கு நல்லாவே தெரியும் நான் இந்த விஷயத்துல உங்க நம்பவே மாட்டேன் என்று சொல்கிறார். மேலும் அவள் தான் படிச்சவ, உனக்கு எங்க போச்சு அறிவு நீ அப்படிப்பட்டவன் கிடையாது சரவணா உன்னை இப்படி மாத்தி வச்சிருக்கா என்று கண்டபடி புலம்புகிறார் சிவகாமி.

பல்பு வெளிச்சத்தில் தனது மொத்த அழகையும் படம் பிடித்து காட்டிய ரச்சித்தா…கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!!

சரவணன் சந்தியாவை கொஞ்சம் கூட பேச விடாமல் இருக்க அர்ச்சனாவும் ஆதியும் மேலும் ஏற்றி விடுகின்றனர். ரவி என்ன செய்வது என்று தெரியாமல் இருபக்கமும் பேச முடியாமல் முழித்துக் கொண்டு உள்ளார். அடுத்ததாக சந்தியா சரவணன் இருவரும் பார்த்துக் கொள்ள தனக்கு பார்த்துக் கொள்ள என்ன பேசுவது என்று தெரியாமல் சரவணன் வெளியே சென்றுவிடுகிறார். எபிசோடு முடிவடைகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here