ஹேமாவின் உயிரை காப்பாற்ற கண்ணம்மா வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கும் பாரதி – லட்சுமி பற்றிய உண்மை தெரியவருமா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி, கண்ணம்மா சொல்லும் கண்டிஷனுக்கு ஒத்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா உடல்நிலை கண்ணம்மா வந்ததும், அவர் குரலை கேட்டதும் மீண்டு வந்தது. மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு செல்ல ஹேமா சமையல் அம்மா இல்லாமல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

மேலும் காய்ச்சல் கொஞ்சம் கூட குறையாமல் இருக்க கண்ணம்மா தான் ஹேமாவிற்கு மருந்து என்று டாக்டர் சொல்ல பாரதிக்கு மேலும் கோவம் வருகிறது. இன்றைய எபிசோடிலும் ஹேமாவின் உடல்நிலை அதே நிலை தான் உள்ளது. சௌந்தர்யா மீண்டும் பாரதியை திட்ட ஆரம்பிக்கிறார்.

உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?? உன் வறட்டு வீம்பால ஹேமா தான் எவளோ பாதிக்கப்படுறா என்று சொல்கிறார். வேறு வழியில்லாமல் கண்ணம்மா வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்ல வழக்கம் போல கண்ணம்மவிடம் கோவமாக நடந்து கொள்கிறார்.

ஹேமாவிற்கு உடல் நலம் சரியாக வேண்டும் என்றால் நீ வீட்டிற்கு வந்து 1 வாரம் தங்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் கோவமடையும் கண்ணம்மா நான் ஏன் உன் வீட்டுக்கு வரணும். நீங்க வேணும்னா என் வீட்டுக்கு வாங்க என்று சொல்கிறார். இதனால் பாரதி உச்சகட்ட கோவத்திற்கு ஆளாகிறார். பாரதி வீட்டிற்கு வந்து தங்குவதாகவும் ஒத்துக்கொள்கிறார். மேலும் இதனால் லட்சுமி பற்றிய உண்மைகள் தெரிய வருமா?? என்ற கேள்வியும் எழுத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here