‘இந்த சமையலை வச்சு உன் பொண்ணு ஹேமாவை மயக்கி உன்ன பழி வாங்குவேன்’ – பாரதியை பழிவாங்க திட்டம் போடும் கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடுகள் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகியுள்ளது. இன்றைய எபிசோடுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிங்க.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா அமெரிக்கா போவதை நினைத்து வருந்திகொண்டுள்ளார். லட்சுமி வீட்டிற்கு வந்து சமாதானம் செய்கிறார். அப்பொழுது பாரதி அங்கு வர கண்ணம்மாவை பற்றி தவறாக பேசுகிறார். இதனால் கோவமடையும் லட்சுமி அவங்களை பேச நீங்க யாரு என்று கேட்கிறார்.

மேலும் பாரதிக்கு சந்தேகமாகிறது. உனக்கும் அவங்களுக்கும் என்ன சமந்தம் எதற்கு இப்படி சப்போர்ட் பண்ற என்று கேட்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். மேலும் என்னையும், ஹேமாவையும் பிரிக்க பாக்குறீங்களா?? என்று அழுகிறார். இதனை பார்த்த அனைவர்க்கும் என்னவோ போல ஆகிறது.

அடுத்ததாக லட்சுமி இரவு முழுக்க ஹேமாவை நினைத்து புலம்பிக்கொண்டுள்ளார். கண்ணம்மாவும் எப்படியோ சமாதானம் செய்து உறங்க வைத்து விட்டார். இப்படி காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பாகி கொண்டிருக்க திடீரென அனைவர்க்கும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பாரதி கண்ணம்மாவின் ரொமான்ஸ் சீன்.

கண்ணம்மா பாரதியை தேடி உள்ளே வர பின்னாளில் இருந்து அணைக்கிறார் பாரதி. இதனை பார்த்த பலருக்கும் ஷாக். மேலும் கண்ணம்மாவை சாப்பாடு எடுத்து வர சொல்லி ஆடம் பிடிக்க அவரும் எடுத்து வருகிறார். மேலும் பாரதி கண்ணம்மாவுக்கும் சேர்த்து ஊட்டி விடுகிறார்.

என்னடா இது என்று ஆச்சரியமாக பார்க்க கண்ணம்மா பாரதியை முறைத்து கொண்டு இந்த சாப்பாடு தான் எனக்கு ஆயுதமே. இந்த சாப்பாடை வச்சு உன் பொண்ணு ஹேமாவை மயக்கி என் கைக்குள்ள போட்டுக்குட்டு என்ன பண்றேன்னு பாரு என்று நினைத்து கொண்டு மிரட்டுகிறார்.

கடைசியில் பார்த்தால் அது வெறும் கனவு. அதுவும் பாரதி கண்ட கனவு. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here