தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தலைமை செயலாளர் உத்தரவு !!!

0

தமிழ்நாட்டில் சமீபகாலமாக முக்கிய அதிகாரிகள் பலர்  பணி இடமாற்றம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை செயலாளர்  உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசு பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது பல முக்கிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. அதன்படி இதுவரை பீலா ராஜேஷ் உட்பட  பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் அடிப்படையில், தற்போது சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீத்தாலட்சுமி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக கோபால சுந்தர்ராஜையும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதை போல் ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக சந்திரகலா பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் இறையன்பு அவர்களின் அறிக்கையின் படி, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகேஸ்வரி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலாளராகவும்,சென்னை மாநகராட்சி கல்வி துறையின் இணை ஆணையராக இருந்த சங்கர்லால் குமாவட், வணிக வரித்துறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்களுடன் கலைச்செல்வி, வளர்மதி, ஆகாஷ் உட்பட மொத்தம் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here