அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு படையெடுத்த அந்து பூச்சிகள்… கூடாரம் கட்டி மரங்களை அழிப்பதாக பகிர் தகவல்!!!

0

பிரம்மாண்டமாக கூடாரம் கட்டி மரங்களை அழிக்கும் ஒருவித அந்து பூச்சி தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பூச்சி வகையின் பூர்விகம் அமெரிக்கா என்றாலும் தற்போது ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் கொடைக்கானல் மலை பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் கூடாரங்கள் அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும். ஆனால் தற்போது சாலையின் ஓரங்களில் அந்துப்பூச்சி கூடாரங்கள் தென்படுவதால் அருகிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்களில் பரவினால் மரம் முழுவதும் இலை இல்லாமல் பட்டுபோகும் ஆபத்து நிலவுகிறது.

இந்த பூச்சி மரத்தில் பரவினால் மரத்தில் இலைகளின் அடியில் முட்டைகளிட்டு இலைகளை அரித்து மரம் முழுவதும் சிலந்தி வலை போல் கூடாரம் அமைத்து விடும்.கிட்டத்தட்ட 500 முட்டைகள் வரை இது இடும் என்று கூறப்படுகிறது. பின்னர், இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு நாளடைவில் கூட்டு புழுவாக மாறி அந்துப்பூச்சியாக வெளிவருகின்றன. இந்த பூச்சி மனிதர்கள் மீது பட்டால் அலர்ஜி ஏற்படும் எனவும் வேறு பெரும் ஆபத்துகள் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here