ராஜமாதா கெட்டப்பில் கலக்கிய ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா தற்போது புதிய விதமாக போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியலில் பயங்கர வில்லியாக வந்து கலக்குபவர் தான் பரீனா. மக்கள் மத்தியில் இவருக்கு அதிக வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பாரதி கண்ணம்மாவில் இப்படி வில்லத்தனமான நடிக்க முடியுமா?? என்று பலரையும் வியக்க வைத்தவர்.

இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அப்பொழுதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் தற்போது வில்லியாகவும் கலக்குவதால் மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பாரதி கண்ணம்மா சீரியலிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

கண்ணம்மாவையும் பாரதியையும் பிரித்தே தீர வேண்டும் என்று அலைந்து கொண்டுள்ளார். பாரதிக்கும் கண்ணம்மாவை திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்ற நேற்றைய எபிசோடில் அவர் நடந்துகொண்ட விதம் பாரதிக்கு ஹேமாவை நியாபகப்படுத்தவே சரிப்பட்டு வராது என்று விட்டுவிட்டார்.

இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்தனர். இப்படி அனைவரிடம் வில்லியாக பேச்சு வாங்குவது தான் ஒரு கதாபாத்திரத்திற்கு வெற்றியே. அதனை சாதித்து விட்டார் பரீனா.

தற்போது பல போட்டோஷூட்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது ராஜமாதா போல கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஏற்கனவே படுவில்லியான இவருக்கு இந்த கெட்டப் பொருந்தவே லைக்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here