ஜெனிலியாவையே ஓரங்கக்கட்டிய பாரதி கண்ணம்மா வெண்பா – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக கலக்கி வரும் வெண்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் காதல் பொங்க ரீல்ஸ் ஒன்றை செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்ஸ் அள்ளி வருகிறது.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா இத்தனை நாட்கள் பாரதி தன்னை எப்படியாவது திருமணம் செய்து கொள்வான் என்று துடித்து கொண்டிருந்தார். ஆனால் வெண்பாவின் குணம் அறிந்து ஹேமாவுக்கு எதாவது பிரச்சனை வருமோ என்று எண்ணி திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை கைவிட்டார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யாவிற்கு இந்த விஷயம் தெரிய வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி சந்தோஷமடைகிறார். ஆனால் கண்ணம்மாவிற்கு இந்த விஷயம் தெரியாது. இதனை வரும் எபிசோடுகளில் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் வெண்பா அடுத்து என்ன பிளான் செய்ய போகிறாரோ என்ற ட்விஸ்ட்டுடனும் கதைக்களம் நகர்ந்துக்கொண்டுள்ளது. இப்படி இருக்க வெண்பா தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவரின் 9 வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘எகிறி குதித்தேன்’ பாடலுக்கு தேவதை போல ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here