பாரதி கண்ணம்மா அகிலனின் வெள்ளித்திரை பயணம் – வைரலாகும் ஹைதராபாத் ஷூட்டிங் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அகிலன் வெள்ளித்திரையில் கால் பதித்துள்ள நிலையில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அகிலன்

பல ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான அகிலன் தற்போது பல நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார். விஜய் டிவியில் இதுதான் அவருக்கு முதல் சீரியல். கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினியும் இவரும் நெருங்கிய நண்பர்களாம்.

அகிலனை இந்த சீரியலில் பரிந்துரைத்ததும் கண்ணம்மா தானாம். அதாவது வீட்டில் கடைசி பையனாக இருக்க அனைத்து அம்சங்களும் இவருக்கு பொருந்தி இருந்ததால் இந்த சீரியலில் செலக்ட் ஆனார். ஆரம்பத்தில் குடும்பத்தில் நாட்டம் இல்லாமல் சுற்றி திரியும் சுட்டி பையனாக இருந்த இவருக்கு அஞ்சலியை மனம் முடித்து வைக்க அதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதாவது அஞ்சலி பாரதி மீது இருந்த காதலால் அவரை பழி வாங்க அகிலனை திருமணம் செய்துகொண்டார். போக போக நாளடைவில் அகிலனை காதலிக்க ஆரம்பித்தார் அஞ்சலி. தற்போது இவர்களின் கதை ஒரு தனி ட்ராக்கில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஹீரோவை விட அகிலன் தான் தற்போது ரசிகர்களின் கனவு நாயகன். மேலும் அவரின் அடுத்த வெற்றியாக வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். அதாவது விஷாலின் 31 வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here