தளபதி பிறந்த நாள்னா சும்மாவா… ட்விட்டரை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்!!

1

இளைய தளபதி விஜய் தனது 47 வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22, 2021) கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரைதுறையினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அது “Best Wishes”, “Happy Birthday Anna” என்ற ஹாஷ்டேக்குகளில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய் அவர்களின் திரை பயண தொடக்கம்  அந்த அளவிற்கு அவருக்கு கை  கொடுக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய விடாமுயற்சியாலும் மனவலிமையாலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி கனியை பற்றிக்கொண்டார். தன்னுடைய அப்பாவின் பல படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் ,நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இவருக்கு ஒரு நல்ல இடத்தை தேடி தந்த படம் என்றால் அது அவர் நடித்த ‘பூவே உனக்காக ‘ படம் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு பிறகு அவரின் வளர்ச்சியை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இவரின் நடிப்பு அவரின்  படத்துக்காக காத்து கொண்டு இருக்கும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து உள்ளது.வெறும் நடிப்போடு மட்டுமல்லாமல் பன்முக திறமையை வெளிப்படுத்தியவர் அதாவது ஆடல்,பாடல் என அனைத்திலும் கலக்கியவர்.

இவ்வளவு புகழுக்கு சொந்தக்காரரான நடிகர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதையடுத்து அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது அது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.மேலும் இவரின் 65வது படத்தின் ஃபஸ்ட் லுக் நேற்று வெளியானது இந்த படத்திற்கு “Beast” என்ற பெயரும் சுடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here