பாரதி கண்ணம்மா குடும்பத்துடன் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுடன் இணைந்து அகிலன், வெண்பா, அஞ்சலி செய்யும் லூட்டிகள் யாவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தான் விஜய் டிவியிலேயே டாப் சீரியல் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு சீரியலில் ஏதாவது ஒரு நாளைக்கு ட்விஸ்டுகள் இருந்தால் பரவாயில்லை, ஆனால் ஆரம்பித்த நாளில் இருந்து பல ட்விஸ்டுகள் இருந்தால் அந்த சீரியல் டாப் ஹிட் தானே.

மேலும் மக்கள் மத்தியில் இந்த சீரியல் ஏக வரவேற்பை பெற்றது. தற்போது பாரதி எப்பொழுது திருந்தி இந்த வெண்பா பின்னால் சுற்றாமல் கண்ணம்மாவை பற்றி புரிந்துகொள்ள போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

பாரதிக்காக எந்த ஒரு வில்லத்தனத்தையும் செய்ய தயாராக இருக்கிறார் வெண்பா. ஆனால் ஏன் கண்ணம்மா வெண்பாவின் சதி எல்லாம் தெரிந்தும் இன்னும் சௌந்தர்யா அகிலனிடம் சொல்லாமல் இருக்கிறார் என்று தான் தெரியவில்லை. இது அனைவர்க்கும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

இப்படி சீரியல்களில் இவர்கள் எல்லாம் அடித்து கொண்டிருக்க நிஜ வாழ்க்கையில் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் தான். அந்த வகையில் தான் தற்போது ஒரு குளத்திற்கு பக்கத்தில் நின்று அகிலன், காவியா, வெண்பா, கண்ணம்மா இணைந்து லூட்டி அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

                                      வாட்ஸ்ஆப்Enewz Tamil வாட்ஸ்ஆப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here