ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா: நடிகர் சூர்யா, நடிகை நயன்தாரா படங்கள் திரையிடத் தேர்வு.. எந்தெந்த படங்கள் தெரியுமா???

0

24வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் நடிகை நயன்தாரா தயாரித்த கூழாங்கல் ஆகிய 2 படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன.

இந்த வருடம் நடைபெறும் 24 வது ஷாங்காய் திரைப்பட விழா நாளை தொடங்கி ஜூன் 20 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த விழாவில் தமிழ் மொழி உட்பட 400க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. தமிழ் மொழி படங்களில் இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அது நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் நயன்தாராவின் கூழாங்கல் படங்கள் ஆகும்.

 

இதில் சூரரைப்போற்று,  சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. மற்றொரு படமான கூழாங்கல், இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி, விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற உலக திரைப்பட விழாக்களில் ஒன்றான ஷாங்காய் திரைப்பட விழாவில் சூரரைப்போற்று மற்றும் கூழாங்கல் படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here