பாக்கியாவால் எழில் வாழ்க்கையில் வெடித்த பூகம்பம்.., கணேஷிடம் வசமாக சிக்கிய அமிர்தா.., அடுத்து நிகழப்போவது என்ன??

0
பாக்கியாவால் எழில் வாழ்க்கையில் வெடித்த பூகம்பம்.., கணேஷிடம் வசமாக சிக்கிய அமிர்தா.., அடுத்து நிகழப்போவது என்ன??
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பாக்கியா வேலைக்கு போன இடத்தில் திருமணம் செய்து வைத்த விஷயம் தெரிந்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் கடும் கோபத்தில் உள்ளனர். இப்படி இருக்கையில் கணேஷின் அம்மா பாக்கியாவுக்கு போன் செய்து அவருக்கு உடம்பு சரியில்லை என்றும் அமிர்தா நிலாவை உடனே பார்க்க வேண்டும் எனவும் சொல்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள எல்லோரும் அமிர்தாவை அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.
ஆனால் பாக்கியா அதையும் மீறி அமர்தாவை கணேஷ் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது தக்க சமயம் பார்த்து கணேஷ் கத்தி முனையில் நிலா, அமிர்தா இருவரையும் கடத்திச் செல்கிறார். இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் நடுரோட்டில் நிற்கதியாய் தவிக்கிறார். இந்த விஷயத்தால் நிச்சயம் பாக்கியாவுக்கு குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரலாம். மேலும் இதை வைத்து எழிலும் தன் அம்மாவிடம் சண்டை போடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here