அஜித்தின் GOOD BAD UGLY படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். கடைசியாக இவர் நடித்த துணிவு திரைப்படம் 100 கோடி வசூலித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, பிரேமலு படத்தில் நடித்த நடிகர் நஸ்லன் GOOD BAD UGLY படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் சுனில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அமராவதி மட்டும்தான் ஆந்திராவின் தலைநகர்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி!!