கோபியின் மகனையும் விட்டு வைக்காத பாக்கியலட்சுமி ராதிகா… அட கடவுளே பாக்கியாவுக்கு தெரிஞ்ச என்னவாகும்??

0

விஜய் டிவியின் பாக்யலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை ஷேர் செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்கிறது. அதாவது இந்த சீரியலின் கதை பாக்கியா என்ற பெண்மணியை கருவாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது இந்த பாக்கியாவை சுற்றி நடக்கும் விஷயங்கள், அவரின் ஆசைகள் கனவுகள், தியாகம், வலி என அனைத்தையும் வெளிக்கொணர்கிறது.

மேலும் இந்த சீரியலின் தற்போதைய கதையாக, கோபி தன்னுடைய முன்னாள் காதலியான  ராதிகா உடன் துணி கடைக்கு சென்று அவருக்கு சேலை வாங்கி தருகிறார். இவர்கள் இருவரும் துணி கடையில் இருப்பதை பாக்கியாவின் வீட்டு வேலைக்காரி செல்வி பார்த்து பதறி ஓடி வந்து பாக்கியாவிடம் கூறுகிறார். அதை பாக்கியா நம்பியும் நம்பாமலும் இருக்கிறார். எனினும் கோபி மீது சிறிது சந்தேகத்துடனே இருக்கிறார் பாக்கியா.

இந்நிலையில் கோபியின் டிபன் பாஸ் எடுக்க காருக்கு செல்லும் பாக்கியா அங்கு காரில் புடவையுடன் ஒரு கவர் இருப்பதை  பார்க்கிறார். அதை கொண்டு வந்து கோபியிடம் கொடுத்து அது பற்றி கேட்க முதலில் ஏதேதோ பொய்கள் சொல்லி சமாளிக்க முயற்சிக்கிறார் கோபி. அதன் பின்னர் இந்த புடவை உனக்கு தான் என கூறுகிறார் சமாளித்து விடுகிறார்.

அதை கேட்கும் பாக்கியா மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கோபி மீது சந்தேகத்தில் இருக்கிறார் எழில் தற்போது இவர்களுடன் செல்வியும் சேர்த்து கொண்டு உள்ளார். இவ்வாறாக பரபரப்பு மற்றும் விறுவிறுப்பு காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்நிலையில் இந்த சீரியலில் கோபியின் முன்னாள் காதலியாகவும் பாக்கியாவின் உற்ற தோழியாகவும் நடித்து வரும் ராதிகா என்ற ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் இவர் எழிலாக நடிக்கும் விஜே விஷாலின் தோள்  மீது கைபோட்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அந்த சீரியலுடன் இணைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here