ஷாருக்கானுடன் இணைந்த அட்லீ!!

0

பிரபல இயக்குனரான அட்லீ  தற்போது ஷாருக்கானை  வைத்து  ஹிந்தியில்  ஒரு படத்தை  இயக்கி  வருகிறார். அந்த  படம்  பற்றிய  விவரங்கள்  தற்போது வெளிவந்துள்ளது. அட்லீயின்  முதல்  படமான  ராஜா ராணி செம  ஹிட் அடித்தது. அடுத்தடுத்து  தளபதியை  வைத்து  2 படங்களை  இயக்கினார் அட்லீ. இவர் இயக்குனராக  களமிறங்கி எடுத்த  3 படங்களுமே  மாஸ்  ஹிட்  அடித்தது. இப்பொழுது தமிழுக்கு  அடுத்து  அவர்  ஹிந்தியிலும்  களமிறங்கியுள்ளார்.

அதுவும் ஷாருக்கான் தான் இந்த படத்தின் நாயகனாம். மேலும் இந்த படத்திற்கு ஜவான் என்று பெயரிட்டுள்ளனர். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம். தமிழ், ஹிந்தி என இந்த  காம்போ எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு  அனைவருக்குமே  உள்ளது. மேலும்  விருந்தளிக்கும் விதமாக  இந்த படத்தின்  இசையமைப்பாளர்  யார் என்றால்  அது  ஏ.ஆர்.ரகுமான் தானாம். இந்த அப்டேட் கேட்டு பலரும் குஷியில் உள்ளனர்.

மேலும்  இந்த  படத்தில் ஷாருக் இரண்டு கதாபாத்திரத்தில்  நடிக்கிறாராம். அதில் ஒன்றாக  ராணுவ அதிகாரியாக நடிக்க இருக்கிறார்  என்ற  பேச்சும்  எழுந்து  வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தின்  டீசர் வெளியாகும்  என்றும்  சொல்லப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்தில்  உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here