பாக்கியாவை வீட்டை விட்டு போக சொல்லும் கோபி… விறுவிறுப்பான காட்சிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்!!!

0

பல விறுவிறுப்பான காட்சிகளுடன் விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா பணத்தை இழந்ததை அடுத்து அவரை வீட்டை விட்டு போகுமாறு சொல்லி கண்டபடி பேசுகிறார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ஆன்லைன் திருட்டின் மூலம் மொத்த பணத்தையும் இழந்ததால் அதை எவ்வாறு மீட்பது என்று தெரியாமல் கதி கலங்கி இருக்கின்றனர் குடும்பத்தினர். மேலும் எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் அலைகிறார் பாக்கியா.

இந்நிலையில் இன்று  அமிர்தா அம்மாவுக்கு ஹார்ட் வேகமாக துடிக்க தீடிரென உடம்பு சரி இல்லாமல் போகிறது. இதையடுத்து அமிர்தாவின் அம்மா எழிலுக்கு போன் செய்ய சொல்கிறார். முதலில் மறுக்கும் அமிர்தா பின்னர் எழிலுக்கு போன் செய்கிறார். இருப்பினும் எழில் போன் எடுக்காமல் கட் செய்கிறார்.

இந்நிலையில் வீட்டிற்கு வரும் கோபி பாக்கியாவை கண்டபடி திட்டுகிறார். மேலும் நாளைக்கு வீட்டுக்கு முன்னாடி யாராவது  வந்து நின்னாலும் நீ தான் பாத்துக்கணும் இதுக்காக நா உனக்கு எந்த சப்போர்ட்டும் பண்ணமாட்டேன் இந்த பிரச்சனை பெருசா வந்தா நீ வீட்ட விட்டு வெளிய போ என கோவமாக கூறி கொண்டு செல்கிறார்.

இதை நினைத்து அழுது கொண்டிருக்கும் பாக்கியாவிடம் என்னோட அம்மா கிட்ட கேட்டு பணம் வாங்கி தரேன், நாம கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுப்போம் என கூறுகிறார் ஜெனி. அதனை ஏற்க மறுக்கிறார் பாக்கியா. அந்த நேரத்தில் அங்கு வரும் செழியன் மற்றும் ஈஸ்வரி பாக்கியாவிடம் சம்மந்தி வீட்டுல போய் பணம் வாங்கி எங்கள அசிங்க படுத்தபோறியா? என கேட்கிறார்.

அவரை தொடர்ந்து செழியன் ஜெனியிடம் நீ என்ன அங்கிள் ஆண்ட்டி கிட்ட அசிங்கப்படுத்த போறியா என சரமாரியாக திட்டிவிட்டு அவரை அழைத்து செல்கிறார். இந்நிலையில் தனக்கு கிடைத்த போன் நம்பர் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் எழில் சித்தூர் சென்று ஒரு வீட்டில் விசாரிக்க அங்கு அவருக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது.

இந்நிலையில் எழில் பாக்கியாவுக்கு போன் செய்து எப்படியாவது பணத்தை மீட்டு வருவதாக நம்பிக்கையுடன் பேசி ஆறுதல் கூறுகிறார். இதை கேட்டுக்கொண்டிருக்கும் எழிலின் நண்பன் நீ எதுக்கு அம்மாவுக்கு நம்பிக்கை கொடுக்குற என கேட்க அதற்கு எழில் அம்மா என்ன நம்பி தான் இருகாங்க நா எதாவது பண்ணியே ஆகணும் என கூறுகிறார். அதன் பிறகு பொழுது விடிகிறது.

அப்பொழுது பாக்கியாவிடம் மாமனார் எழில் பற்றி விசாரிக்க அப்பொழுது கோபி எழிலை முதலில் வீட்டுக்கு வர சொல்லு அந்த திருட்டு கும்பல்  ரொம்ப பயங்கரமானவங்க அதனால அவன வர சொல்லு என கூறுகிறார். அந்த நேரத்தில் பாத்திர கடைக்காரர் பணம் கேட்டு வீட்டுக்கு வந்து  சத்தம் போடுகிறார்.

அப்பொழுது பாக்கியாவின் மாமனாரும் செல்வியும் நாளை பணம் தருவதாக கூறி அவரை சமாதானம் செய்து அனுப்புகின்றனர். அப்பொழுது கோபி நாளைக்கு எல்லாரும் இது மாறி வந்து நிப்பாங்க நீ தரலான கண்டிப்பா அவங்க போலீஸ் கிட்ட போவாங்க அப்போ என்ன பண்ண போற என கேட்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் பாக்கியா. இத்துடன் முடிகிறது இன்றைய கதைக்களம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here