பாக்கியாவை பிரிய முடிவெடுக்கும் கோபி… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!!

0

விஜய் டிவியின் புகழ் பெற்ற மக்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா பற்றி தப்புத்தப்பாக ராதிகாவிடம் சொல்லி அவரின் தோளில் சாய்ந்து அனுதாபம் தேடுகிறார் கோபி. மேலும் இனி பாக்கியா தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்லில் சமையல் ஆர்டர் மூலம் கிடைத்த பணத்தை இழந்து அதையே நினைத்து அழுது கொண்டிருக்கிறார் பாக்கியா. இந்நிலையில் இன்று கோபி கொஞ்சமாவது அறிவு இருக்கா உன்னால ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்ல ஆனா பிரச்சனை மட்டும் வந்துட்டே இருக்கு என சரமாரியாக திட்டுவிட்டு செல்கிறார். இந்நிலையில் பாக்கியா எழில் மற்றும் தாத்தா போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்கின்றனர்.

அங்கு போலீஸ் பணம் கிடைக்கிறது அவ்வளவு ஈசி இல்ல உங்க கம்பிளைண்ட்ட நாங்க எடுத்துகிறோம் ஆனா பணம் கிடைக்குமா இல்லையான்னு எங்களால உறுதியா சொல்ல முடியாது நீங்க கிளம்புங்க என கூறுகிறார். இதையடுத்து ஈஸ்வரி போலீஸ் முடியாதுன்னு கை விரிச்ச பிறகு இனி என்ன பண்ண போற எங்கள கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடுறியா? என கேட்கிறார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டு பெண்கள் இருவர் வந்து நாங்க பணம் காணாம போச்சுன்னு கேள்விப்பட்டோம். அது எப்படி பணம் காணாம போகும் எங்களுக்கு தரக்கூடாதுன்னு நீயே வச்சுக்க முடிவு பண்ணிட்டியா என கேட்க அதற்கு ஈஸ்வரி பாக்கியா பத்தி உங்களுக்கு தெரியாதா? அவ என்ன அப்படிபட்ட ஆளா அவள பத்தி உங்களுக்கு தெரியாதா என திட்டுகிறார்.

இதையடுத்து எழில் மற்றும் செல்வி இன்னும் இரண்டு நாள பணம் வந்து வாங்கிக்கோங்கன்னு சொல்லி அவர்களை அனுப்பிவைக்கிறனர். அதன் பின்னர் தான் செய்த தப்பை எண்ணி கதறி அழுக்கிறார் பாக்கியா. அவரை நான் இருக்கேன் என சமாதானம் செய்கிறார் எழில். மேலும் பாக்கியா போனுக்கு வந்த அந்த நம்பர் வாங்கி ஏதாவது பண்ணலாம் என கூறிக்கொண்டு வெளியே செல்கிறார் எழில்.

இந்நிலையில் கோபி ராதிகா வீட்டிற்கு வந்து தன் மனைவி தன்னை கொடுமை படுத்துவதாகவும் பக்கத்து வீட்டு பெண்களிடம் இருந்து பணம் பெற்று அதை ஒருவரிடம் கொடுத்து இழந்து விட்டதாக கூறுகிறார்.

மேலும் ரொம்ப கஷ்டமாக இருப்பதாக சொல்லி ராதிகாவின் தோளில் சாய்ந்து அழுக்கிறார். இதையடுத்து கோபி, நிஜமாவே பாக்கியா உன்னுடைய வாழ்க்கைக்கு வேணுமா வேண்டாம் கோபி என தனக்குள்ளயே சொல்லிக் கொள்கிறார்.

அதன் பிறகு எழில் தன் நண்பரை சந்திக்க வருகிறார். மேலும் பாக்கியாவின் போன் மூலம் கிடைத்த நம்பர் வைத்து கொண்டு தனது நண்பர் மூலம் பணத்தை கண்டுபிடிக்க திட்டமிடுகிறார் எழில். இதனுடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here