Bajaj Discover 100 & 125 பைக்குகள் விற்பனை இந்தியாவில் நிறுத்தம் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

0

இந்தியாவில் Discover 110 மற்றும் 125 பைக்குகளின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்படுவதாக Bajaj நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

Bajaj Discover 100 & 125 பைக்குகள்..!

Bajaj ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களை BS -6 தரத்திற்கு மேம்படுத்த்இ வரும் சூழ்நிலையில் BS-4 எஞ்சின் கொண்ட Discover 110 மற்றும் Discover 125 பைக்குகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த பைக்கை முதன்முதலாக 125 சிசி எஞ்சின் மாடலில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதை தொடர்ந்து 100சிசி, 125 சிசி, 135 சிசி மற்றும் 150 சிசி ரேஞ்சுகளில் Bajaj Discover பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 16 ஆண்டுகளாக நாட்டின் விற்பனையாகி வந்த Discover பைக்குகள் 30 வேரியன்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதிக்கம் செலுத்தும் pulsar & Platina..!

கடந்த சில மாதங்களாகவே Bajaj Discover ரேஞ்ச் பைக்குகள் பெரியளவிலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யவில்லை. இந்த செக்மென்டை பொறுத்தவரை தொடர்ந்து Bajaj CD மற்றும் Platina ரேஞ்ச் பைக்குகள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேபோல 125 சிசி செக்மென்டில் Bajaj நிறுவனம் pulsar 125 மாடல் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதன் காரணமாக Discover 110 மற்றும் 125 பைக்குகளின் உற்பத்தியை கைவிட முடிவு செய்துள்ளதாக Bajaj ஆட்டோ தகவல் வெளியிட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here