உலகிலேயே முதல் முறை – அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா.!

0

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. அமெரிக்காவில் 336,550 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 9610 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அமெரிக்காவில் புதிதாக 25000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. மேலும் மனிதர்களை அடுத்து பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தாக்கியுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் புலி

பிரான்க்ஸ் விலங்குகள் சரணாலயத்தில் உள்ள நாடியா என்ற புலிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இன்று நடத்தப்பட்ட சோதனையில் அந்த புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

உலகளவில் 12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

Manali Wildlife Sanctuary, Manali - 2020 (Photos & Reviews)

இந்த புலிக்கு 4 வயது ஆகிறது. மலையான் வகை புலி ஆகும் இது. கடந்த சில நாட்களாக கடுமையாக இருமி வந்த இந்த புலிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அந்த புலிக்கு மோசமான சுவாச பிரச்சனையும் இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் அதற்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Bengal Tiger's Death due to Illness, Says Official ...

தற்போது அதே சரணாலயத்தில் இன்னும் 5 புலிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இந்த புலிகளுக்கு விரைவில் சோதனை செய்யப்படும். ஆனால் சரணாலயத்தில் இருக்கும் வேறு விலங்குகளுக்கு கொரோனா அறிகுறி இல்லை. தற்போது விலங்குகளுக்கான மருத்துவமனையில் வைத்து இந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எப்படி வந்தது

எப்படி புலிக்கு கொரோனா வைரஸ் தாக்கியது, அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது, இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த சரணாலயத்தில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாமலே அவருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது .

86 Of The Tigers Rescued From The 'Tiger Temple' In Thailand Have ...

அவர்கள் மூலம் இந்த புலிக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த சரணாலயம் கடந்த மார்ச் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் மூடப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here