கேப்டனாக களமிறங்கும் புதிய வீரர்.., அப்போ வாஷிங்டன் சுந்தர் நிலைமை??

0
கேப்டனாக களமிறங்கும் புதிய வீரர்.., அப்போ வாஷிங்டன் சுந்தர் நிலைமை??

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணியை இந்தியன் ஐடிசி எஃப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தமிழக அணி அறிவிப்பு!!

இந்த ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டிராபி அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடருக்கு இந்தியாவில் இருந்து பல மாநிலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிகள் அனைத்தும் ஒடிசா, சிக்கிம், பெங்கால், ஜார்கண்ட் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணியை இந்திய உள்நாட்டு கிரிக்கெட் மன்றம் தற்போது அறிவித்துள்ளது. இந்த அணிக்கு அபராஜித் கேப்டனாகவும், வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் TNPL தொடரில் சிறப்பாக விளையாடிய சாய் கிஷோர், மற்றும் சஞ்சய் யாதவ் இடம்பிடித்துள்ளனர். இந்த தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில், சட்டீஸ்கர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

தமிழ்நாடு அணி :

பி அபராஜித் (கேப்டன்), எம்எஸ் வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பி சாய் சுதர்சன், டி நடராஜன், எம் ஷாருக் கான், ஆர் சாய் கிஷோர், ஆர் சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர், எம் சித்தார்த், வருண் சக்கரவர்த்தி, ஜே சுரேஷ் குமார், சி ஹரி நிஷாந்த் , ஆர் சிலம்பரசன், எம் அஷ்வின், ஜி அஜிதேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here