கோடிக்கணக்கில் கல்லா கட்டி மாஸ் காட்டிய டாப் 5 திரைப்படங்கள்.., முழு லிஸ்ட் இதோ!!

0
கோடிக்கணக்கில் கல்லா கட்டி மாஸ் காட்டிய டாப் 5 திரைப்படங்கள்.., முழு லிஸ்ட் இதோ!!
கோடிக்கணக்கில் கல்லா கட்டி மாஸ் காட்டிய டாப் 5 திரைப்படங்கள்.., முழு லிஸ்ட் இதோ!!

இந்திய சினிமாவில் வெற்றி அடைந்த திரைப்படங்களும், வார இறுதியில் வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாப் 5 படங்கள்:

இந்திய சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. ஆனால் அதில் சில படங்களே ரசிகர்கள் மத்தியில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் சாதனை படைத்த படங்களில் முதலாக இருப்பது நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் தான். இப்படம் வெளியான வார கடைசியில் ரூ.193.99 கோடி வசூலை அள்ளி உள்ளது. இந்த வசூலை இதுவரை எந்த படமும் முறியடிக்க வில்லை. அதற்கடுத்து இரண்டாவதாக இருக்கும் திரைப்படம் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் படம் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படமும் கிட்டத்தட்ட ரூ.180.36 கோடி வசூலித்துள்ளது. இதனை தொடர்ந்து கிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்து 2019ம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான வார் திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வார கடைசியில் 166.25 கோடி வசூலை குவித்தது.இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்த திரைப்படம் பாரத். இப்படத்தில் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர்.

மேலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் வார கடைசியில் 150.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வரிசையில் கடைசியாக இருக்கும் சல்மான்கான் மற்றும் சோனம் கபூர் நடித்த பிரேம் ரத்தன் தன் பாவ் படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படம் 129.77 கோடி வசூலை பெற்றது. இந்த வார இறுதியில் வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்களில், நடிகர் சல்மான்கான் நடித்த மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here