ஸ்கூல்ல வச்சு பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி…. உண்மையை போட்டு உடைத்த ராதிகா – அடுத்தடுத்த ட்விஸ்ட் இதோ!

0

சூடு பிடித்து நகரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைக்கான எபிசோடுல கோபி, இனியா படிக்குற ஸ்கூல்ல செஞ்ச காரியம் ரசிகர்களை கலங்க வச்சிருக்கு. வாங்க! பார்ப்போம் அப்படி என்னதான் நடந்துச்சுன்னு.

பாக்கியலட்சுமி

இன்னைக்கு எழிலை பார்க்க வந்த அமிர்தா உங்க அம்மாவ பார்த்தேன் இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுறதுக்கு தேவையான பணத்தை நினைச்சு ரொம்ப கவலைப்பட்டாங்கன்னு சொல்ல, ஆமா அம்மாக்கு இருக்க ஒரே கவலை அதுமட்டும் தான் அப்டினு சொல்லி வருத்தப்படுகிறார். இந்த பக்கம் சேட்டை பார்க்க போன செல்வி அக்கா பணத்தோடு வருகிறார். அதை பார்த்து பாக்கியாவும் நல்ல வேளை பணத்தோட வந்த, சரி நான் கிளம்பி இனியா ஸ்கூலுக்கு போறேன். அப்பறம் எழிலுக்கு பணம் கிடைச்ச விஷயத்தை சொல்லணும் என கூறுகிறார்.

அப்படியே எழிலுக்கு போன் செய்து பணம் கிடைச்சிருச்சு என சொல்ல, எப்படி மா? யாரு குடுத்தா? தாத்தா குடுத்தாங்களா? என கேள்வியை அடிக்கிட்டே போக. பாக்கியா எல்லாத்தையும் வீட்டுக்கு வந்து பொறுமையா சொல்லுறேன்னு சொல்லி போனை வைக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இனியாவுக்கு பீஸ் கட்டிட்டு கார்ல ஏற போன கோபி, ஸ்கூல்ல ராதிகாவை பார்க்கிறார். உடனே என்ன இந்த பக்கம் என கேட்க, ராதிகா நாங்க மும்பை போற பிளான் தள்ளி போட்டதால மயூவை ஸ்கூலுக்கு மறுபடியும் அனுப்ப முடிவு எடுத்திருக்கேன்.

அதான் டீச்சரை பார்த்து பேசிட்டு போக வந்தேன் என சொல்ல, கோபி ‘oh my god ‘ இந்த முடிவை நான் எதிர்பார்க்கவே இல்ல. எனக்கு மயூவை படிக்க வச்சு பெரிய ஆளாக்கணுங்கிறது என்னோட கனவு என கூறுகிறார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே கோபி நான் ஒன்னு நினைச்சு வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஆனா இப்போ அனாதை மாதிரி ஹோட்டல்ல தங்கி இருக்கேன் என கஷ்டத்தை கவலையுடன் சொல்ல, ராதிகா நான் மொத வந்த வேலைய பாக்குறேன்னு சொல்லி கிளம்புகிறார்.

இந்த பக்கம் பாக்கியாவும் இனியாவுக்கு பீஸ் கட்ட ஸ்கூலுக்கு வருகிறார். அங்கு அவங்க அப்பா கோபி பீஸ் கட்டிட்டாங்க என டீச்சர் சொல்ல, பாக்கியாவும் நான் இனியாவை பாக்கணும் என சொல்லுகிறார். அப்போ இனியாவை பார்த்த பாக்கியா நீ தான் உங்க அப்பாவை பீஸ் கட்ட சொன்னியா ? அப்டினு கேட்க, உன்ன மாதிரி எங்க அப்பா இல்ல. நான் சொல்லாமலே என் டாடி வந்து கட்டிட்டாங்கனு நக்கல் செய்கிறார். அதுக்கு அப்றம் ராதிகா மீண்டும் ஸ்கூலை விட்டு வெளியே போறப்போ கோபி அவர் கையை பிடித்து முடிவு சொல்லு ராதிகா என கேட்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுக்கு ராதிகா என்னால பாக்கியா டீச்சருக்கு துரோகம் பண்ணமுடியாது என சொல்ல, கோபமாகிய கோபி ‘டீச்சர் ..டீச்சர்..டீச்சர்.. எப்போ பார்த்தாலும் பாக்கியாவை மட்டும் தான் யோசிப்பியா? என்ன யோசிக்கவே மாட்டியா ? சட்டைக்கு பேண்ட் மேட்ச் ஆகலைன்னா தூக்கி போட்ருப்பேன். ஆனா எனக்கு மேட்ச்சே ஆகாத வாழ்க்கைய எப்படி வாழ சொல்லுற? பாக்கியாவுக்கு அறிவு,அழகு,ஆஸ்தி, அந்தஸ்த்துன்னு எதுவாது இருக்கா? நீ ஏன் என்ன புரிஞ்சிக்கவே மாட்டிங்குற. எனக்கு உன்னதான் புடிச்சிருக்கு. நீ, நான், மயூ, இனியா நம்ம நாலு பேரும் ஒன்னா சந்தோசமா வாழணும்னு ஆசைப்படுறேன். உனக்கு அப்டி ஆசை இல்லையா ? என கேட்க, ராதிகாவும் இருக்கு கோபி என பட்டுன்னு உண்மையை போட்டு உடைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here