மாநிலம் முழுவதும் பண்டிகை கால சிறப்பு போனஸ் – குஷியில் அரசு ஊழியர்கள்!!

0
மாநிலம் முழுவதும் பண்டிகை கால சிறப்பு போனஸ் - குஷியில் அரசு ஊழியர்கள்!!

மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மாநில அரசு மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது.

அரசு அறிவிப்பு:

கேரள மக்களால் ஆண்டு தோறும், ஓணம் பண்டிகை ஆவணி மாதம் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாட்கள் பிரமாதமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் அத்தப்பூ கோலம், படகு போட்டி, பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அரங்கேறும்.

லிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இந்த பண்டிகையை கொண்டாடும் கேரளா அரசு ஊழியர்களுக்கு, ஊதியத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓணம் பண்டிகை போனஸாக ரூ.4000 வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போனஸ் பெற தகுதி இல்லாத அரசு ஊழியர்களுக்கு, சிறப்பு தொகையாக ரூ.2,750 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஓய்வூதியரார்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து ரூ. 20,000 ரூபாய் பண்டிகை கால முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், பகுதி மற்றும் தற்காலிக ஊழியர்கள் ரூ. 6000த்தை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கேரளா அரசு ஊழியர்கள், கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here