விநாயகர் சதுர்த்தியில் மறந்தும் செய்யக்கூடாத மூன்று விஷயங்கள் என்னென்ன தெரியுமா? உடனே பாருங்க!

0
விநாயகர் சதுர்த்தியில் மறந்தும் செய்யக்கூடாத மூன்று விஷயங்கள் என்னென்ன தெரியுமா? உடனே பாருங்க!

நாளை (31-08-2022) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தன்று தும்பிக்கை கடவுள் விநாயகருக்கு பூஜை செய்வதன் மூலம் அவரின் பரிபூரண அருளை பெறலாம். அதே சமயம் விநாயகர் சதுர்த்தியில் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

விநாயகர் சதுர்த்தி:

  • இந்த நல்ல நாளில் பலர் விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவர். ஒருவேளை நீங்கள் அவ்வாறு விநாயகர் சிலை வாங்கி பூஜை செய்தால் விநாயகரை வணங்கி விட்டு எங்கோ கொண்டு வைப்பது கூடாது.
  • அதே சமயம் யாராவது எடுத்துச் செல்வார்கள் கரைத்து விடுவார்கள் எனும் அலட்சியத்துடன் இருக்க கூடாது. முறைப்படி பூஜை முடிந்தவுடன் நீர் நிலைகளில் விநாயகரை கரைக்கவேண்டும்
  • இவ்வாறு விநாயகரை நீரில் கரைக்கும் முன், அவருக்கு ஆரத்தி, பூஜை மற்றும் பிரசாதம் வழங்க வேண்டும்.
  • ஒரு வேளை வீட்டில் இருக்கும் விநாயகரை வைத்து நாம் வழிபாடு செய்தால் சுப முகூர்த்தத்தில் வழிபாடு செய்யவேண்டும்.
  • 31ம் தேதி காலை பூஜை செய்கின்றோம் எனில் 30ம் தேதி மாலையே வீட்டினை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விநாயகருக்கு பிரசாதமாக பால், பழங்கள், கொழுக்கட்டை, தேங்காய், வாழைப்பழம், பொறி, பொங்கல் ஆகியவற்றை வைக்கலாம். அல்லது மிக எளிமையாக செய்ய வேண்டும் என்றால் வாழைப்பழம், அவல் பொரிகடலை என்று நம்மால் இயன்றதை வைத்து வழிபடலாம். பரிபூரண அன்போடு நாம் எதை பிரசாதமாக வைத்தாலும் அதை அந்த விநாயகர் பரிபூரணமாக ஏற்று அருள் புரிவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here