முகம் பார்த்து பேசும் உன்னை….,, முதல் காதல் சிந்தும் கண்ணை…, லவ் மூடுக்கு மாறிய பாக்கியலட்சுமி சுசித்ரா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுசித்ரா தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆரம்பித்து சில வருடங்களிலேயே அதிக பிரபலமானது. இதற்கு முக்கிய காரணமே கோபி கதாபாத்திரம் தான். எப்பொழுது பாக்கியாவிற்கு உண்மை தெரியவரும்.

இதனால் அவரது நிலை என்னாகும் என்று இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். இது ஹிந்தி சீரியல் டப்பிங் என்பதாலும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. பாக்கியா தன்னை நிரூபிப்பதற்காக பல வேலைகளை செய்து வருகிறார். தனியாக பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார்.

ஆரம்பத்தில் ராதிகா மற்றும் பாக்கியா இடையே நல்ல உறவு ஏற்பட்டாலும் கோபி விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும்?? மேலும் வீட்டில் உள்ளவர்கள் கோபியை எப்படி ஏற்றுக்கொள்வர்கள்?? என்ற பல கேள்வி ரசிகர்களுக்கு உள்ளது. என்ன தான் சீரியலில் பாக்கியா பயந்த பெண்ணாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர் அப்படி கிடையாது.

தனக்குள் இருக்கும் திறமைகளை இன்ஸ்ட்டாவில் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here