அசால்ட்டாக விருதை தட்டிச் சென்ற வீராங்கனை.., நீங்க உண்மையிலே பெரிய ஆல்ரவுண்டர் தான்!!

0
அசால்ட்டாக விருதை தட்டிச் சென்ற வீராங்கனை.., நீங்க உண்மையிலே பெரிய ஆல்ரவுண்டர் தான்!!
அசால்ட்டாக விருதை தட்டிச் சென்ற வீராங்கனை.., நீங்க உண்மையிலே பெரிய ஆல்ரவுண்டர் தான்!!

கமென்வெல்த் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆகஸ்ட் மாதத்திற்கான விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை வென்று அசத்தியுள்ளார்.

ICC மாதாந்திர விருது!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சிறப்பாக செயல்பட்ட டாப் வீராங்கனைகளுக்கான விருதை ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் ஆல்ரவுண்டர் தஹ்லியா மெக்ராத் தட்டிச் சென்றார். இவர் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் ஆஸ்திரேலிய அணி தங்கப் பதக்கம் வெல்வதற்கு மிக முக்கிய பங்காக இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அந்த காமன்வெல்த் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டத்தில் தஹ்லியா மெக்ராத் 51 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் அரைசதம் கடந்து 78 ரன்கள் குவித்தார். மேலும் பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றனர்.

இந்த காமன்வெல்த் தொடரில் சிறப்பாக விளையாடிய தஹ்லியா மெக்ராத்க்கு தற்போது விருது கிடைத்துள்ளது. இந்த விருதை வென்ற தஹ்லியா, “ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி மகளிர் வீராங்கனையாக நான் தேர்வு செய்யப்பட்டதில் பெருமை அடைகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது வென்ற தருணத்தில் என்னுடன் விளையாடிய சக வீராங்கனை மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி தெரிவிப்பதாக தஹ்லியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here